

2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 9வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேற்றப்பட்டது.
மும்பை அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மாவிடமிருந்து ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை ஏற்றதிலிருந்து அந்த அணி தடுமாறி வருகிறது.
மும்பை அணியில் பல நட்சத்திர வீரர்களும், பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தனேவும் இருந்தபோதிலும், மும்பை அணி ஒருங்கிணைந்து செயல்பட திணறியது.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக பதவி ஏற்றதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உடைமாற்றும் அறையில் பிளவும் கசப்பும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகி உள்ளது.
என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஒரு நிபுணர் தேவையில்லை. தங்களின் முக்கிய வீரர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கும் மும்பை அணி, ஒருபோதும் இப்படி இருந்ததில்லை என்று செய்தி வெளியாகியுள்ளன.
உடைமாற்றும் அறையில் வெளிப்படையாகத் தெரியும் பிளவு, களத்தில் வெளிப்படும் உடல்மொழி, அவர்கள் விளையாடும் விதம் என எதுவாக இருந்தாலும், பிரச்சினைகள் தெளிவாகத் தெரிகின்றன.
மும்பை அணி வீரர்கள் களத்திற்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அனைத்து வீரர்களும் வருகைப் பதிவை மட்டுமே செய்வதாக தெரிகிறது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.