French Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
marta kostyuk
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், சக நாட்டு வீராங்கனையான எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோஸ்ட்யூக் முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்விடோலினா 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கோஸ்ட்யூக் 6-2 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதி சுற்றில் மர்டா கோஸ்ட்யூக், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com