மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து அரை இறுதிக்கு தகுதி- ஸ்ரீகாந்த் தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து- ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து அரை இறுதிக்கு தகுதி- ஸ்ரீகாந்த் தோல்வி
Published on

கோலாலம்பூர்:

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து-சீனாவின் ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜி.துஞ்சங்வுடன் நாளை மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் ஆதிநாடாவிடம் 21-16, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com