146 ரன்களுக்கு ஆல் அவுட்டான லக்னோ... வெற்றிப்பாதையை தொடருமா பெங்களூரு?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை குவித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
146 ரன்களுக்கு ஆல் அவுட்டான லக்னோ... வெற்றிப்பாதையை தொடருமா பெங்களூரு?
Published on

2026 ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ, பெங்களூரின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியாக 20வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 40 ரன்களும், முகுல் சௌத்ரி 39 ரன்களும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் ரஷிக் சலாம் 4 விக்கெட்டுகளும், புவனேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளும், ஹேஷில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பெங்களூரு விளையாட உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இன்று இம்பேக்ட் ப்ளேயராக விளையாட உள்ளார் விராட் கோலி.

லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள நான்கில் இரண்டில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்திற்கு செல்லும்.

X

Maalai Malar
www.maalaimalar.com