அதிவேக 900 கோல்: சாதனை படைத்த Lionel Messi

கிறிஸ்டியானோ ரொனால்டோ 965 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
லியோனல் மெஸ்சி
லியோனல் மெஸ்சி
Published on

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை நடத்தப்படுகிறது.

இதன் நடப்பு சீசனில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி, நேஷ்வில் எஸ்சி அணியுடன் மோதியது. இந்தப் போட்டியின் 7-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி கோலடித்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில், அந்த கோல் மூலம் அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டிகளில் 900 கோல் அடித்த 2-வது வீரரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும், 900 கோல்களை குறைந்த போட்டிகளில் அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்சிக்கு கிடைத்தது.

இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 965 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com