Indonesia Open பேட்மிண்டன்: லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஏமாற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
lakshya sen kidambi
Published on

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பர்ஹான் 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பானின் யூஷி தனகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com