Malaysia Masters: முதல் சுற்றில் லக்சயா சென், எச்.எஸ்.பிரனாய் ஏமாற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
Malaysia Masters: முதல் சுற்றில் லக்சயா சென், எச்.எஸ்.பிரனாய் ஏமாற்றம்
Published on

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஜகி உபயதுல்லா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீரர் 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் கோடை நரோகா 21-17, 20-22, 24-22 என்ற செட் கணக்கில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com