

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்ன் உடன் மோதினார்.
முதல் செட்டில் 2-0 என லக்சயா சென் முன்னிலை பெற்றிருந்தபோது தாய்லாந்து வீரர் காயத்தால் விலகினார். இதனால் லக்சயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 18-21, 21-16, 15-21 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.