லுங்கி பாய்ஸ் வீடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

பெங்களூரு வீரர் க்ருணால் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லுங்கி பாய்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
லுங்கி பாய்ஸ் வீடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!
Published on

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ல் 10 அணிகள் விளையாடினாலும் ரசிகர்கள், அவரவர்களுக்கு எந்த அணியை பிடிக்குமோ, அந்த அணிகளின் போட்டிக்காகவே அதிகம் காத்திருப்பர். அதிலும் சென்னை, மும்பை, பெங்களூரு அணியின் ரசிகர்கள் இந்த அணிகளின் போட்டிகள் எப்போது நடைபெறும் என்பதையே எதிர்பார்த்து இருப்பர்.

இந்நிலையில் இப்போது அந்தநிலை மாறி, போட்டியைத் தாண்டி எப்போது லுங்கி பாய்ஸ் ராஜ்ப்ரியன் வீடியோ வரும் என்பதற்காகவே காத்திருக்கின்றனர். காரணம் ஐபிஎல் தொடர்பாக இவர்கள் வெளியிடும் நையாண்டி வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆர்சிபி வீரர் க்ரூணால் பாண்டியா இவர்களின் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை மற்றும் பெங்களூரு அணி இடையே நடந்த போட்டியின்போது க்ருணாலின் பந்துவீச்சு பெரிதும் பேசப்பட்டது.

இதனையடுத்து அப்போட்டியில் க்ருணால் எப்படி விளையாடினார் என்பதை சித்தரித்து லுங்கி பாய்ஸ் குழுவினர் வீடியோ பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோ வைரலாக, அதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் க்ருணால் பாண்டியா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com