யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், ரோனக் சவுகான் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
kidambi srikanth
Published on

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லியாவ் ஜோ பூ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-9 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-12 என கைபற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிடாம்பி 21-8 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 23-21, 21-11 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் மிஷா ஜிப்லர்மேனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் தேவிகா சிஹாக் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com