யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரோனக் சவுகான்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
kidambi
Published on

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் லீ ஜி ஜியா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 21-16, 26-24 என்ற செட் கணக்கில் தைவானின் சௌ டைன் சென்னை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com