

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான சனீத் தயானந்த் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 23-21, 21-16 என்ற செட் கணக்கில் சக வீரர் சங்கர் சுப்ரமணியனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.