ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் த்ரில் வெற்றி பெற்ற லக்சயா சென்

முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் த்ரில் வெற்றி பெற்ற லக்சயா சென்
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் லக்சயா சென் 21-15 என்ற கணக்கிலும் 2-வது செட்டில் ரஜாவத் 21-12 என கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றி யாருக்கு என்ற 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com