புரோ கபடி லீக்: உபி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்றாவது வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக்: உபி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்
Published on

ஐதராபாத்:

11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால், யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.

இறுதியில், உபி யோதாஸ் அணியை 33-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் 3வது வெற்றி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com