

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை மாளவிகா பன்சோத் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பரூவா முதல் செட்டை 21-7 என வென்றார். இரண்டாவது செட்டில் பரூவா 15-7 என முன்னிலை பெற்றபோது
மாளவிகா பன்சோத் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இஷாராணி பரூவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே, இந்தியாவின் தன்வி ஷர்மா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.