ஐபிஎல் 2026: ரஜத் பட்டிதார் அதிரடி... குஜராத்திற்கு 255 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்துள்ளது பெங்களூரு அணி.
ஐபிஎல் 2026: ரஜத் பட்டிதார் அதிரடி... குஜராத்திற்கு 255 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு!
Published on

ஐபிஎல் 2026 தொடரின் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்று இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் குஜராத் அணிக்கு 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 93 ரன்கள் குவித்தார். குஜராத் தரப்பில் ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து குஜராத் பேட்டிங் செய்யவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும். தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அந்த அணி, 'எலிமினேட்டர்' போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மே 29 அன்று நடக்கும் தகுதிச் சுற்று 2-ல் மோதி இறுதிப்போட்டிக்கு முன்னேற மீண்டும் வாய்ப்பைப் பெறலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com