

ஐபிஎல் 2026 ஆண்டுகான கிரிக்கெட் தொடரின் 64 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.
ராஜஸ்தானின் கடைசி ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதி 20 ஓவர்களில் 193-8 ரன்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 16.4 ஓவர்களில் 188-3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி இருக்கிறது அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து வந்தது. புள்ளி பட்டியலில் 5 வது இடத்தை பிடித்து இருக்கிறது.
13 புள்ளிகளை பெற்று பஞ்சாப் அணி 4 வது இடத்தில் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நடக்க விருக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறும் அதனால் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்ய கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
லக்னோ அணி ஏற்கனவே பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் எஞ்சிய போட்டிகளில் வென்று மற்ற அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பைக் கெடுக்கும் 'ஸ்பாய்லர்' காரணியாக இன்றும் விளையாட இருக்கிறது என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலமாக பார்க்கப்படும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்றைய அணியின் பிளேயிங் 11-க்கு மீண்டும் திரும்புவது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் கேப்டன் கூட்டணி அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்க வைக்குமா? அல்லது லக்னோ அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்துமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்த படத்தின் முதல் பாகம் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா இணைத்து நடித்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த கதைக்களத்தை கொண்டு தமிழில் கமல் மற்றும் கௌதமி இணைந்து நடித்ததில் 'திரிஷ்யம்'என்ற படம் 'பாபநாசம்' என்ற படத்தின் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் வெளியானது.
அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போலவே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.