

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கார்த்திக் ஷர்மா 71 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் இன்று புதிதாக அறிமுகமாக அகாஷ் சிங் தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சபாஷ் அஹமத், முகமது ஷமி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 188 ரன்களை இலக்காக கொண்டு லக்னோ பேட்டிங் செய்யவுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கு இப்போட்டியின் வெற்றி மிகவும் அவசியமானதாகும்.
லக்னோ ப்ளே ஆஃப்-ல் சுற்றுக்கு தகுதிபெறாமல் முன்னரே வெளியேறினாலும் இப்போட்டியில் வெற்றிப்பெற முயற்சிக்கும். கடந்த மே 10 அன்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில், லக்னோ நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.