ஐபிஎல் 2026: கொல்கத்தாவிற்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு.
ஐபிஎல் 2026: கொல்கத்தாவிற்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு!
Published on

2026 ஐபிஎல் தொடரின் இன்றைய 38வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்கிறது. ஏப்ரல் 9 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய மோதலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் லக்னோ தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கொல்கத்தா தனது முந்தைய தோல்விக்கு பழிவாங்க முயற்சிக்கும்.

மேலும் இரண்டு அணிகளுக்கும் இது ஒரு முக்கியமான ஆட்டமாகும், ஏனெனில் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க இந்த வெற்றி இரு அணிகளுக்கும் அவசியமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com