ஐபிஎல் 2026: 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் - ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா சென்னை?

சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசினர்.
ஐபிஎல் 2026: 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் - ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா சென்னை?
Published on: 

2026 ஐபிஎல் தொடரின் 66-ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசினர். சென்னை தரப்பில் முகேஷ் சௌத்ரி, அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 230 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கவுள்ளது. சென்னை அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும். பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் சென்னை கட்டாயம் வென்றாக வேண்டும்.

இதில் வென்று 14 புள்ளிகளைப் பெற்றாலும், ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளின் போட்டி முடிவுகள் மற்றும் சிறந்த நெட் ரன்ரேட் அடிப்படையிலேயே சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும்.

குஜராத் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. எனினும், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முடித்து குவாலிஃபையர் 1 சுற்றிற்குத் தகுதிபெற இந்த ஆட்டத்தின் வெற்றி அதற்கு அவசியமாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com