ரந்தீர் சிங் மறைவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரங்கல்

பல்வேறு பொறுப்புகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சகாப்தத்தின் முடிவை இது குறிக்கிறது.
Randhir Singh
Published on

மூத்த இந்திய விளையாட்டு நிர்வாகி ரந்தீர் சிங் அவர்களின் மறைவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) இரங்கல் தெரிவித்தது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்குள்ள அதன் தலைமையகத்தில் ஒலிம்பிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஐஓசி தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியும், "ஒலிம்பிக் இயக்கத்திற்கு சிங் ஆற்றிய மிகச்சிறந்த சேவைக்காக" அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த சிங், நேற்று (புதன்கிழமை) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். நாட்டின் விளையாட்டு துறையில் பல்வேறு பொறுப்புகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சகாப்தத்தின் முடிவை இது குறிக்கிறது.

அவருக்கு வயது 79. உயிர் நீப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மனைவி வினிதா மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் — மஹிமா, சுனைனா மற்றும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான ராஜேஸ்வரி.

ஐ.ஓ.சி. கௌரவ உறுப்பினர் ராஜா ரந்தீர் சிங் அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு ஐ.ஓ.சி. ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது... அவரது மறைவு ஒலிம்பிக் இயக்கத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒலிம்பிக் இல்லத்தில் மூன்று நாட்களுக்கு ஒலிம்பிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்," என்று ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com