ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.முதல் சுற்றிலேயே இந்தியாவின் அஷ்மிதா, மால்விகா தோல்வி அடைந்தனர்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com