கோ கோ உலகக் கோப்பை 2025: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி

இந்திய ஆண்கள் அணி இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.இந்திய பெண்கள் அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கோ கோ உலகக் கோப்பை 2025: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியுடன் மோதியது.

இதில் இந்திய ஆண்கள் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. இறுதியில், இந்திய ஆண்கள் அணி 100-40 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வங்கதேச அணியை 109-16 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com