

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்றைய 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, சரிவர விளையாடமால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. அணியின் கேட்பன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் அணி 17 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றியின்மூலம் குஜராத் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5வது இடத்தில் இருந்த சென்னை அணி 6வது இடத்திற்கு குறைந்துள்ளது.
மேலும் இத்தோல்வியின் மூலம் அடுத்து வரும் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை செல்லும்.