ஐபிஎல் பரபரப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி செய்தி: தந்தையான சூர்யகுமார் யாவத்... ரசிகர்கள் வாழ்த்து மழை!

இந்திய கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவ்விற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.
ஐபிஎல் பரபரப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி செய்தி: தந்தையான சூர்யகுமார் யாவத்... ரசிகர்கள் வாழ்த்து மழை!
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினர், கடந்த மார்ச் மாதம் தங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் வளைகாப்பு விழாவைக் கொண்டாடியிருந்தனர். 

இந்தத் தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். இருவரும் தங்கள் குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த செய்தியை அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சூர்யகுமார் யாதவ் 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் மும்பை அணி சரியாக விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ்வும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறிவருகிறார்.

இந்நிலையில் மகள் வந்துள்ள மகிழ்ச்சி இனிவரும் போட்டிகளில் அவருக்கு அதிக உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com