

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் க்ரூப் I-இல் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் மோதின. நியூ யார்க் நகரில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.
போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் திக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கைலன் எம்பாப்பே மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்றைய போட்டியில் 2 கோல்களை அடித்த நிலையில், அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே ஜெர்மனி வீரர் கெர்ட் முல்லருடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
இதன் மூலம் எம்பாப்பே லயோனல் மெஸ்ஸி மற்றும் ஜஸ்ட் ஃபோன்டைன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் பிரேசில் வீரர் ரொனால்டோ (15) மற்றும் ஜெர்மனி வீரர் மிரோஸ்லவ் க்லோஸ் (16) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எம்பாப்பே இருக்கிறார்.
27 வயதான எம்பாப்பே தற்போது தனது மூன்றாவது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி வருகிறார். அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரிலேயே இவர் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னணி இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.