

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் L பிரிவில் இடம்பெற்று இருக்கும் இங்கிலாந்து மற்றும் க்ரோஷியா அணிகள் களம் கண்டன. டல்லாஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது அணிக்கு கோலை அடித்து அசத்தினார். இதன் காரணமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் க்ரோஷியா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. எனினும், இங்கிலாந்து அணி இந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை.
ஆட்டத்தின் 42-ஆவது நிமிடத்தில் இங்கலாந்து வீரர் டெல்கன் ரைஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ சிரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கன் தனது அணிக்கு கோல் அடித்தார். இதனால் மீண்டும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கண்க்கில் ஆதிக்கம் செலுத்தியது.
எனினும், சற்றும் தொய்வின்றி ஆடிய க்ரோஷியா அணி ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் தனது 2-ஆவதி கோலை அடிக்க இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் புள்ளிகள் சமனுக்கு வந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் 2-2 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தொடங்கிய ஆட்டத்தின் 2-வது பாதி தொடங்கியதும் 47-ஆவது நிமிடத்தில் இங்கலாந்து அணி கோல் அடித்தது.
தற்போது இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. ஆட்டத்தின் 85-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மற்றொரு கோல் அடிக்க 4-2 என்ற கணக்கில் ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.