உலகக் கோப்பை கால்பந்து: கத்தாரை துவம்சம் செய்த கனடா... 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி

ஆட்டத்தின் 75-ஆவது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் ஓன் கோல் அடிக்க கனடா 5-0 என முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்து: கத்தாரை துவம்சம் செய்த கனடா... 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா மற்றும் கத்தார் அணிகள் இன்று களம் கண்டன. பி.சி. பிளேஸ் வேன்கவரில் நடந்த இந்தப் போட்டியில் கனடா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் கைல் லாரின் தனது அணிக்கு முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் கனடா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 29-ஆவது நிமிடத்தில் ஜொனாதன் டேவிட் கோல் அடிக்க கனடா 2-0 என ஆதிக்கத்தை தொடங்கியது. மேலும், 45-ஆவது நிமிடத்தில் ஜொனாதன் டேவிட் மற்றொரு கோல் அடிக்க கனடா அணி 3-0 என்ற நிலையை எட்டியது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை கனடா அணி 3-0 என ஆதிக்கம் செலுத்த, இரண்டாவது பாதியில் கத்தார் கோல் கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகள் தரப்பிலும் வீரர்கள் மாற்றம் நடக்க ஆட்டத்திந் 64-ஆவது நிமிடத்தில் கனடா தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. கனடா வீரர் நேதன் சலிபா கோல் அடிக்க கனடா 4-0 என முன்னேறியது.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 75-ஆவது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் ஓன் கோல் அடிக்க கனடா 5-0 என முன்னேறியது. ஆட்டத்தின் கடைசியில் ஜொனாதன் டேவிட் மற்றொரு கோல் அடிக்க கனடா அணி 6-0 என்ற கணக்கில் கத்தார் அணியை துவம்சம் வீழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com