ரியல் மாட்ரிட் அணியில் மேலும் ஒரு வருடம் விளையாடும் அன்டோனியோ ருடிகர்

ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியா ருடிகர் ரியல் மாட்ரிட் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.
அன்டோனியோ ருடிகர்
அன்டோனியோ ருடிகர்அன்டோனியோ ருடிகர்
Published on

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட். இந்த கிளப்பில் ஜெர்மனைச் சேர்ந்த 33 வயதான அன்டோனியோ ருடிகர் 2022-ம் ஆண்டு இணைந்தார். செல்சி அணியில் இருந்து 4 வருட ஒப்பந்தம் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். அவருடைய ஒப்பந்தம் இந்த வருடத்துடன் நிறைவடைந்தது. சவுதி அரேபியில் இருந்து சில அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டின. இந்த நிலையில் மேலும் ஒரு வருடம் விளையாட ரியல் மாட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

2024-ல் ரியல் மாட்ரிட் அணி ஸ்பெயின் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின் இரண்டு சீசனில் ஏமாற்றமே கிடைத்தது. இநத் நிலையில் அணியை வலுப்படுத்த பயிற்சியாளர் ஜோஸ் மவுரினோ தலைமையில் மாட்ரிட் அணி நெருக்கடியில் உள்ளது.

பிபா உலக கோப்பை கால்பந்து

ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த சீசனில் 26 போட்டிகளில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பைக்கான ஜெர்மனி அணியில் இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com