பெங்களூரு அதிரடி... சால்ட், கோலி, பட்டிதர் அரைசதம்: 241 ரன்களை எட்டி வெற்றியை சுவைக்குமா மும்பை?

மும்பைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி.
அதிரடி பேட்டிங்... சால்ட், கோலி, பட்டிதர் அரைசதம்: 241 ரன்களை எட்டி வெற்றியை சுவைக்குமா மும்பை?
Published on

2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 19வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரின் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் 20வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பெங்களூரு பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.

அதிரடியாக பேட்டிங் செய்த பெங்களூரு தரப்பில் பில் சால்ட் (78), கோலி (50), ரஜத் பட்டிதர்(53) என மூவரும் அரைசதம் விளாசினர். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர், மிட்செல் சார்ட்னர், ஹர்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதன்மூலம் மும்பை அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய மூன்றில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் இப்போட்டியில் வெற்றிப் பெற தீவிரமாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com