யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் தேவிகா சிஹாக்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
devika sihag
Published on

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் நாளை வரை நடக்கிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தேவிகா சிஹாக், ஜப்பானின் ரிகோ ஜங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாக் 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 16-21, 21-11, 11-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி அடைந்தார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-15, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் கனடாவின் ரச்சேல் சானிடம் தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரோனக் சவுகான் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com