பாகிஸ்தானுக்கு முதன்முறையாக செல்கிறது ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே பெண்கள் ஒயிட்பால் கிரிக்கெட் அணி முதன்முறையாக பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது
பாகிஸ்தானுக்கு முதன்முறையாக செல்கிறது ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி
Published on

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முதன்முறையாக பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 2025-2029 ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த தொடரில் விளையாட இருக்கிறது.

மே 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடரும், மே 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை டி20 கிரக்கெட் தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் நேஷனல் பேங்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com