வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 410 ரன்கள் குவிப்பு

ஹராரேயில் நடைபெற்று வரும் டெஸ்டில் இன்னசென்ட் கையா சதத்தால் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 410 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே- வங்கதேசம் டெஸ்ட்
ஜிம்பாப்வே- வங்கதேசம் டெஸ்ட்
Published on

ஜிம்பாப்வே- வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

வங்கதேசம் 144 ரன்களில் ஆல்அவுட்

அதன்படி வங்கதேச அணி முதலில் களம் இறங்கியது. ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 140 ரன்களில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். ஷத்மான் இஸ்லாம் 20 ரன்களும், கேப்டன் ஷான்டே 19 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணியில் நியூமேன் நியாம்ஹுரி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இன்னசென்ட் சதம்

பின்னர், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் இன்னசென்ட் அபாரமாக விளையாடி 153 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரேக் எர்வின் 60 ரன்களும், பிரையன் பென்னெட் 59 ரன்களும் அடித்தனர். வெஸ்லி மாதேவெரே 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 410 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா வங்கதேசம்

பின்னர் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்கதேச அணிக்கு இன்னும் 230 ரன்கள் தேவை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com