

ஜிம்பாப்வே- வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேச அணி முதலில் களம் இறங்கியது. ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 140 ரன்களில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். ஷத்மான் இஸ்லாம் 20 ரன்களும், கேப்டன் ஷான்டே 19 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணியில் நியூமேன் நியாம்ஹுரி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் இன்னசென்ட் அபாரமாக விளையாடி 153 பந்தில் சதம் விளாசினார். தற்போது ஜிம்பாப்வே 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. இன்னசெட் கையா 133 ரன்களுடனும் விளையாடி வருகிறார்.