உலகக் கோப்பை குத்துச்சண்டை: 20 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது.
உலகக் கோப்பை குத்துச்சண்டை: 20 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
Published on

உலக கோப்பை குத்துச்சண்டை (World Boxing Cup) உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் மொத்தம் 38 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 10 எடை பிரிவுகளில் (weight categories) நடைபெற்றது.

இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடமும் இங்கிலாந்து 2 தங்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. மற்ற நாடுகள் (ஆஸ்திரேலியா, ஜப்பான், சீன தைபே, கஜகஸ்தான், போலந்து) தலா 1 தங்கம் வென்றன.

இந்நிலையில் உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரில் 20 பதக்கங்களை வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எதிர்காலத்திலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க உங்களை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com