மகளிர் டி20 உலகக் கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி
Nigel French
Published on

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.பவர்பிளேயில் இந்தியா 59 ரன்கள் எடுத்தது. யாஸ்திகா பாட்டியா 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்தியா ஸ்கோர்:

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.தீப்தி ஷர்மா 21 பந்துகளில் 29 ரன்களும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர். இறுதியில், அருந்ததி ரெட்டி ஏழு பந்துகளில் ஆறு ரன்களுடனும், பிரேமா ராவத் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டி முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில், மரிசான் கேப் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷப்னிம் இஸ்மாயிலும் நான்கு ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அபார பேட்டிங்:

எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு கேப்டன் லாரா மற்றும் டஸ்மிம் ப்ரிட்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 20 மற்றும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆனெரி டெர்க்சென் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க அடுத்து வந்த மரிசேன் கேப் 45 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்ரீ சராணி 3 விக்கெட்டுகளையும், ஷபாலி வெர்மா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com