இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் அமீர் ஜாங்கூ சதம் விளாசினார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களம் இறங்கிய 2-வது டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
அமீர் ஜாங்கூ
அமீர் ஜாங்கூ
Published on

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை இடையிலான முதல் நேற்று ஆன்டிக்குவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை முதல் நாளிலேயே 308 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா சதம் அடித்தார்.

அமீர் ஜாங்கூ சதம்

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. அமீர் ஜாங்கூ 78 ரன்களுடனும், ராஸ்டன் சேஸ் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேஸ் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். அமீர் ஜாங்கூ 226 பந்தில் சதம் விளாசினார். இது அவரின் 2-வது டெஸ்ட் போட்டியாகும். 2-வது டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com