அமீர் ஜாங்கோ, ரோஸ்டன் சேஸ் பொறுப்பான ஆட்டம்: இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 271/5

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது.
amir jangoo
Published on

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 1-0 என இலங்கையும், டி20 தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீசும் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தனஞ்செய டி சில்வா சதமடித்து 120 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். சோனல் தினூஷா 43 ரன்னில் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிராண்டன் கிங் 31 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் 39 ரன்னில் வெளியேறினார்.

6வது விக்கெட்டுக்கு அமீர் ஜாங்கோ, ரோஸ்டன் சேஸ் இணைந்து 103 ரன்கள் சேர்த்துள்ளனர். அமீர் ஜாங்கோ 79 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com