இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் 75 ரன்னில் அவுட் ஆனார். இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங், ஹோப் களமிறங்கினர். இதில் கிங் 4 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஹோப்புடன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய ரோஸ்டன் 25 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோவ்மன் பவல் 9 ரன்னில் நடையை கட்டினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 75 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் ரூதர்ஃபோர்ட் மற்றும் மேத்யூ ஃபோர்டு அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com