

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு பின்னடைவாக, நட்சத்திர இலங்கை ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா, நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்று வீரரை அந்த அணி வரும் நாட்களில் அறிவிக்கும் என தகவல் வெளியாகிள்ளது.
முன்னணி வீரரான ஹசரங்கா தசைநார் காயத்தில் அவதியடைந்துள்ளதால், நடப்பு ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தொடரில் இருந்து விலகுகிறார். இவருக்கான மாற்று வீரரை எல்.எஸ்.ஜ விரைவில் அறிவிக்க இருக்கிறது.
நேற்றிரவு (வியாழக்கிழமை) ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது,எல்.எஸ்.ஜி. அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அதன்படி, "அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள்" ஒரு மாற்று வீரரை அறிவிப்போம் என்று மூடி கூறினார்.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை விளையாடாத தென் ஆப்பிரிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லிண்டே, மூத்த ஆல்-ரவுண்டர் ஹசரங்காவிற்குப்பதிலாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
"அவர் எங்களுடன் இணைய முடியாது என்ற உண்மைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். மாற்று வீரர்களைப் பரிசீலித்து வருகிறோம், அது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும்," என்று வியாழக்கிழமை கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான எல்எஸ்ஜி ஆட்டத்தின் போது மூடி கூறியதாக தகவல்.