IPL 2026 | அவன் மாறவே மாட்டான்: சூர்யவன்ஷி குறித்து சுவாரஸ்ய தகவலை தெரிவித்த ஆர்.சி.பி. வீரர்

சூர்யவன்ஷியை தொழில்முறை வீரராக மாற்ற பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவர் அவ்வாறு மாறமாட்டார் என்று ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்
IPL 2026 | அவன் மாறவே மாட்டான்: சூர்யவன்ஷி குறித்து சுவாரஸ்ய தகவலை தெரிவித்த ஆர்.சி.பி. வீரர்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதில் அறிமுகம் ஆனவர் வைபவ் சூர்யவன்ஷி. சிறுவனான சூர்வன்ஷியால் என்ன செய்ய முடியும் என்று மற்ற அணிகள் நினைத்தன. ஆனால், தான் சந்தித்த முதல் பந்தையை சிக்சருக்கு பறக்க விட்டு அனைவரையும் வியக்க வைத்தார். அதன்பின், ஒரு சதமும் விளாசினார்.

இதன்மூலம் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இவற்றிலும் அபாரமான வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை படைத்தார்.

ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பார்வையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் அந்த அணியின் தற்போதைய வீரர் ஜித்தேஷ் சர்மா யூடியூப் சேனில் சூர்யவன்ஷி குறித்து பேசினார்.

அப்போது ஏபி டி வில்லியர்ஸ் "வைபவ் சூர்வன்ஷி சிறந்த வீரர். 19 வயதிற்கு உட்பட்டோர் உலகக் கோப்பையில் அவரது ஆட்டத்தை பார்த்தேன். ஐ.பி.எல். மற்றும் பெரிய லீக்கில் விளையாடியது போன்று, அதே நிலையை தொடர்ந்து செய்தவது எளிதான காரியம் அல்ல.

எனினும், மிகவும் தொழில்முறையுடன் உலகக் கோப்பையில் விளையாடியது என்னை ஈர்த்தது. அவனுடைய வயதில் நம்ப முடியாத வகையிலான முதிர்ச்சியுடன் இருக்கிறான். அவனுடைய விளையாட்டு திட்டத்தில் உறுதியாக இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விளையாடியது போன்றே விளையாடுகிறார். ஏதாவது ஒன்றை அவன் முயற்சிக்கவில்லை. பந்து வீச்சாளர்ளிடம் ஆணவமாக நடந்து கொள்ளவில்லை. அவன தொழில்முறை கிரிக்கெட்டராக மாறுவார்" என்றார்.

அதற்கு ஜித்தேஷ் சர்மா, "சூர்வன்ஷி தொழில்முறையானவர் கிடையாது. இதை நாங்கள் உங்களுக்கு சொல்ல முடியும். எல்லோரும் அவரை தொழில்முறை கிரிக்கெட்டராக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் அப்படி ஆவார் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த பட்சம் கிரிக்கெட்டிற்கு வெளியில் கூட. கிரிக்கெட் மைதானத்திற்கு அப்படி இருக்கலாம். நான் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறேன். இரவில் (லேட் நைட்) ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம் என்று நான் அவனிடம் சொல்கிறேன், ஆனால் அவன் ஒருபோதும் கேட்பதில்லை" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com