டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா

அமெரிக்கா தரப்பில் சைதேஜா முக்கமல்லா 51 பந்திகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்கா- நெதர்லாந்து அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக விளையாடிய சைதேஜா முக்கமல்லா 51 பந்திகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மோனாங்க் படேல் 36 ரன்னில் வெளியேறினார். கடைசி நேரத்தில் போராடிய சுபம் ரஞ்சனே 48 ரன்கள் எடுத்தார்.

இதனால் அமெரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com