2வது டி20 போட்டியில் அபார வெற்றி - நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த யு.ஏ.இ.

டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தது.
2வது டி20 போட்டியில் அபார வெற்றி - நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த யு.ஏ.இ.
Published on

துபாய்:

நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 63 ரன்கள் எடுத்தார். பவுன்ஸ், நீஷம் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அயனாஷ் ஷர்மா டக் அவுட்டானார்.

கேப்டன் முகமது வசீம் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்கள் சேர்த்தார். ஆசிப் கான் 29 பந்தில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், யு.ஏ.இ. அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.

3 விக்கெட் வீழ்த்திய ஆயான் அப்சல் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com