டாம் லாதம், கான்வே அசத்தல் சதம்: முதல் நாளில் ரன்குவிப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து

சிறப்பாக ஆடிய டாம் லாதம், கான்வே சதமடித்து அசத்தினர்.
latham, conway
Published on

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இந்த ஜோடியைப் பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் கடும் சிரமப்பட்டனர். சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 57 ஓவரில் 228 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 111 ரன்னும், கான்வே 107 ரன்னும் எடுத்திருந்தனர்.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டி வெற்றியாளரை முடிவு செய்வதாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com