அடுத்த இலக்கு டி20 உலகக் கோப்பை தான்.. ஜெமிமா ரோட்ரிக்ஸ் நம்பிக்கை

அடுத்த உலகக்கோப்பையை வெல்வதே தங்களின் முக்கிய இலக்கு என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.
அடுத்த இலக்கு டி20 உலகக் கோப்பை தான்.. ஜெமிமா ரோட்ரிக்ஸ் நம்பிக்கை
Published on

உலகப்புகழ் பெற்ற 'சூப்பர் மரியோ' வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'சூப்பர் மரியோ கேலக்ஸி' திரைப்படத்தின் இந்திய புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும், படத்தின் இந்திய விளம்பரத் தூதராகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், அடுத்த உலகக்கோப்பையை வெல்வதே தங்களின் முக்கிய இலக்கு என தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சிறுவயதில் எனது சகோதரர்களுடன் சேர்ந்து 'சூப்பர் மரியோ' விளையாடியது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. அந்த கேமில் வரும் 'மரியோ' கதாபாத்திரம் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவது எனக்கு எப்போதும் உத்வேகத்தைத் தரும்.

மரியோ எப்படி ஒவ்வொரு லெவலிலும் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து இலக்கை நோக்கி ஓடுகிறானோ, அதே போன்ற ஒரு போராட்ட குணத்தைத்தான் நான் கிரிக்கெட்டிலும் கடைபிடிக்கிறேன்.

ஏற்கனவே ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளோம். தற்போது இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையைத் தட்டித்தூக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். இந்திய அணியின் தற்போதைய ஃபார்ம் மற்றும் தன்னம்பிக்கை, மீண்டும் ஒரு உலக சாதனை படைக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com