வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவராக தமிம் இக்பால் நியமனம்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி மாற்றமாக, முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவராக தமிம் இக்பால் நியமனம்
Published on

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி மாற்றமாக, முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முறைகேடு புகார்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் காரணமாக, முந்தைய தலைவர் அமீனுல் இஸ்லாம் புல்புல் தலைமையிலான நிர்வாகக் குழுவை தேசிய விளையாட்டு கவுன்சில் கலைத்துள்ளது.

புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை, கிரிக்கெட் வாரியத்தின் அன்றாடப் பணிகளை கவனிக்க 11 பேர் கொண்ட இடைக்காலக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்குத் தமீம் இக்பால் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதாகும் தமீம் இக்பால், வங்கதேச கிரிக்கெட் வாரிய வரலாற்றிலேயே மிக இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிசிபி (BCB) தேர்தல்களில் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய ஐவர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமீம் இக்பால் தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கேப்டன் மின்ஹாஜுல் அபெடின் மற்றும் முன்னாள் வீரர் அதர் அலி கான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமீம் இக்பாலின் இந்த வருகை, பிசிபி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com