

ஆசிய போட்டிகள் வருகிற செப்டம்பர்- அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற இருக்கிறது. இதில் டி20 கிரிக்கெட்டும் இடம் பிடித்துள்ளது.
முன்னணி அணிகளை தவிர்த்து மற்றும் அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்னேற தகுதிச் சுற்று தொடர் நடத்தப்பட்டது.
இந்த தொடரில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதன்மூலம் ஆசிய போட்டிக்கு முன்னேறின. 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணியும் தகுதி பெறும். அந்த வகையில் 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் சீனா- நேபாளம் அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 7 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் சீனா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி பெற்றது. இதன் மூலம் சீனாவும் தகுதிப் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் தாய்லாந்து வெற்றி பெற்றது. தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், நேபாளம், சீனா, இந்தோனேசியா அணிகள் பங்கேற்றன.