

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 தொடங்கியது. தற்போதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
இந்த சீசனில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டாஸில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் முதலில் பேட்டிங் இறங்கியது.
அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசான் 35 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். அபிஷேக் சர்மா 48 ரன்கள், ட்ராவிஸ் ஹெட் 46 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 39 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 226 ரன்கள் குவித்தது. 227 என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க உள்ளது.