வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 66 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ரியான் பர்ல் 10 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி
Published on

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 31 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது.

லெக் ஸ்பின்னர் ரியான் பர்ல் 10 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 66 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சாகப்வா அதிகபட்சமாக 37 ரன்களும், தடிவானாஷே மருமணி 35 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பெற்ற முதல் ஒருநாள் வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலியாவுடன் பெற்ற வெற்றியை ஜிம்பாப்வே அணி கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியவில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 96 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com