20 ஓவர் உலகக்கோப்பை அணியில் தீபக் ஹூடாவை சேர்க்க வேண்டும்- முன்னாள் இந்திய வீரர் கருத்து

தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.
தீபக் ஹூடா
தீபக் ஹூடா
Published on

மும்பை:

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com